இயற்கையின் அதிசயம்

பட்டப் பகலில் மொட்டவிழ்ந்தது
நீ அங்கு வந்ததால்
பட் பட் என்று மலர்கிறது
உன் பார்வை பட்டதால்

காலங்காலையில்
கதிரவன் அவசரமாய்
கார்மேகத்தில் புதைந்தான்
நீ வியர்வை சிந்தியதை
பார்த்துவிட்டது போலும்

உன்னை காண இயலாத
கவலையில் கண் ணீர் வடித்தான்
உன்னை நினைத்தே
உன்னையும் நனைத்தான்

நீ ஆடை உலர்த்த
தன்னை தேடி வரும் தருணத்தில்
ஆனத்தமாய் சிரித்தான்

உன் கூந்தல் எறவே
பூக்கள் மலர்கின்றன
உன் பாதம் படவே
உதிர்ந்தவையும் தவிக்கின்றன

தொட்டாசிணுங்கியும்,
நீ தொட்டால் சிணுங்குவதில்லை
சிலிர்த்துத்தான் போகிறது

நீ நாணும் போது சிவப்பது
உன் முகம் மட்டும் அல்ல
இந்த வானும், நானும் தான்

குயில், நீ வந்தால் தான் பாடுகிறது
மயிலும் உன் முகம் கண்டால் தான் ஆடுகிறது

அன்னம் நடைப்பழக
அன்பே உன்னை அழைக்கிறதாம்

உன்னை காண வேண்டியே
நிலவு தேய்ந்து போனது
நீ தான் இரவில் வெளிவருவதில்லையே
எப்போதாவது வரும்போது
அதன் பிறவிப் பயன் பூர்த்தியடைகிறது

நீ தொட்டால் முல்லும் மலரும்
உன் கைப்பட்டால் கல்லும் கரையும்

உன்னை தேடி வந்து
தென்றல் வீசும்
உன் பாதம் நனைக்காமல் ஓய்வதில்லை
என்று அலைகள் பேசும்

இயற்கையின் அதிசயமே
இயற்கையே உனக்கு அடிமை
இந்த இளைஞன் எம்மாத்திரம்

உன்னை காணும்போதே
என் இதயம் துடிக்கிறது
நீ இமைக்கும் போது
அது இரட்டிப்பு ஆகிறது

நீ பருகும் தண் ணீரும்
தேனாய் இனிக்கிறது
நீ இல்லாமல் பண் ணீ ரும்
ஏனோ வெறுக்கிறது

மண் பார்த்தே நடக்கின்றாயே
நான் மண்ணாக பிறந்திருக்கலாம்
புல்லில் உறங்குகின்றாயே
நான் புல்லாக பிறந்திருக்கலாம்
மனிதனாக் பிறந்ததே
உன்னை மணந்துக் கொள்ளத்தான்

என்னுள் இருக்கும் உன்னிடம்
நான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றேன்
எப்போது நீ என்னிடம்
எப்போதும் பேசப் போகின்றாய்

முதல் சந்திப்பின் நிலையிலேயே
இன்றும் இருக்கின்றோம்
நம் உறவில் ஏன் இன்னும் நெறுக்கம் இல்லை
இதனால் எனக்கு என்றும் உறக்கம் இல்லை

அடுத்து நான் உறங்குவது
உன் மடியில்; இல்லையேல்
மண்ணுக்கடியில்

[1996.09.08]