இளைஞனே எழுந்து வா

இளைஞனே நீ எழுந்து வா
உறுதியுடனே விரைந்து வா
வெற்றி தேடி ஓடி வா
கடமை உணர்வு கொண்டு வா

காத்திருக்க நேரமில்லை
காலம் என்றும் நிற்பதில்லை
காலம் அறிந்து செயல்பட்டால்
வெற்றி இதோ தொலைவில் இல்லை.

வெற்றி காண தடை எது
தெரிந்து அதை தகர்த்தெடு
நம்பிக்கை யோடு அடி எடு
வெற்றி நோக்கி படை எடு

முடியும் என்றால் முடியாததில்லை
முடியாது என்றால் முடியப்போவதில்லை
முடியும் என்றே முடிவெடு
முடித்துக் காட்ட புறப்படு.

[1995?]