வாழ்க்கை பயணம்

ஏன் பிறந்தேன் என்றால்…
அனுப்பி வைத்தான்
அவதரித்தேன்.

ஏன் பிறந்தேன் என்றால்…
அது ஒன்றே நான் அறிவேன்.

நான் செய்ததென்றால்
காரணம் அறிவேன் — இது
நான் செய்த தன்று
செயலில் நான் ஒரு பங்கு

எதற்கு அனுப்பிவைத்தான், தெரியவில்லை
தெரியாமல் என் செய்ய புரியவில்லை
அனுப்பியவன் எங்கே காணவில்லை
கண்ணாம்மூச்சி விளையாட இது நேரம் இல்லை

கண் மூடி திறப்பதற்குள்
முப்பது ஆண்டுகள் முடிந்தது
திறந்த கண் மூடுவதற்குள் — இன்னும்
எத்தனை ஆண்டுகள் இருக்கிறதோ —
அதற்குள் எத்தனை ஆட்டங்கள் வருகிறதோ.

செய்வதறியாமல் செய்வதென்ன
களத்தில் இரங்காமல் ஜெயிப்பதென்ன

செய்ய ஏதும் இல்லை என்று
எது வேண்டுமானாலும் செய்யலாமா?
செய்ய என்ன இருக்கு என்று
தேடிப் பார்த்து செய்யனுமா?

நாளுக்கு நாள் செல்கிறது
நான் செய்ததென்ன தெரியவில்லை
நாள் தொரும் இப்படியே போனால்
நான் காணும் பயன் என்ன புரியவில்லை.

வாழ்வளித்து அனுப்பியது
எனக்காகவா? பிறருக்காகவா?

என்னால் எனக்கென்ன பயன்
என்னால் பிறருக்கென்ன பயன்

பயன் இருந்தே ஆகனுமா வாழ்வில்
பயன் இல்லையேல்
பாழாய் போய்விடுமா சில நாளில்

எட்டா இழக்கை எட்ட துடிப்பது வாழ்வா
எட்டிய இழக்கை எண்ணி மகிழ்வது வாழ்வா

ஓடிக்கொண்டே இருப்பது தான் வாழ்வா
ஓடையின் மடியில் ஓய்வெடுப்பது வாழ்வா

நாம் காணும் கனவே வாழ்க்கையா
நாம் வாழும் வாழ்க்கையே கனவா

ஆயிரம் கேள்விகளுக்கும்
ஓரே விடை.
ஒரு விடை சொல்வதற்கும்
ஆள் யாரும் இல்லை.

விடை தேடுவதே வாழ்க்கையா
வினா தொடுப்பதே வாழ்க்கையா

(விடை) அறியவே ஆயுட் காலம் எடுத்தால்
அறிந்ததை அமல் படுத்துவது எப்போது

அமல் படுத்த ஏதும் இல்லையா
அதற்கென உள்ளதே அடுத்த பிறவியா

மீண்டும் பிறந்தால்
அறிந்ததை அறிவோமா? — இல்லை
வாழ்க்கை பயணம் தொடருமா?
(அறிய மீண்டும் அலைவோமா?)

[2003.07.01]