கவலை கல்யாணம்

கல்யாணம் முடிந்து விட்டால்
கவலை தீர்ந்து விடுமாம்
கடவுளே சொன்னது போல்
கண்மூடி தனம் ஏனோ?

நம்பிக்கை – ஞாயம் தான்
மூட நம்பிக்கை பாவம் தான்

கல்லுளி மங்கனும்
கருனையில்லா கயவனும்
கணவனாய் ஏற்க
கன்னிக்கென்ன தலைவிதியா?

மூனு வயசு சின்னவ எல்லாம்
மூனு புள்ள பெத்தாச்சு
முப்பது ஆகும் முன்னே
முடிச்சு ஒன்னு போடவேனும்

::

வயதாகும் தந்தை
கண் கசக்கும் அன்னை
கண்ணீரைப் போக்கவே
கல்யாண ஏற்பாடாம்

கடன் வாங்கி, கண் கசக்கி
கல்யாணம் முடித்து விட்டு
அப்பாடா-ன்னு அமரும் முன்னே
அப்பா-ன்னு குரல் கேட்கும்

கொடுத்தது பத்தல
கொண்டுவா மீதி-ன்னு
வீதியிலே விட்டேறிந்தான்
கட்டையில போர பய

கண்ணீரும் பையுமா
பொரந்த வீடு வந்தாச்சு
கண்ணியின் கல்யாணம்
அதற்குள் முடிந்தாச்சு

கண்மூடும் காலதுல
கடன் வாங்கி கல்யாணம்
மீண்டும் காசுன்னா
கடவுளே நான் என்செய்ய

கண்ணீரும் கவலையும் வாடிக்கையாச்சு
கண்ணியின் கனவோ மறந்தே போயாச்சு.

[2005.Q1?]