மூடியே கிடந்த
ஜன்னல் கதவுகளை திறந்தேன் …
என் வாழ்வில்
வசந்தம் வீசியது.
என்
ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜன்னல், அந்த
ஜன்னலுக்கு உள்ளே, ஒரு ஜ்வால மின்னல்
மின்னல் தாக்கின் தாங்குமா
இதயம் பலவீணமானது
இடியில்லா மின்னல்
இதயம் இடம் மாற
செய்த மின்னல்
கம்பிக்கு பின்
ஒரு காவியம்
தொடங்கியது
காதல் ஓவியம்
உலகம் தடையாய்
தெரியவில்லை
கம்பி தடையாய்
இருந்தது
ஆறு மணிக்கு
பார்த்த நாள் முதல்
அந்நேரம் ஆனால்
ஜன்னல் வாசம்
முதலில் பார்க்கத்
தான் செய்தோம்
பிறகு சிரித்தோம்
பின் கை அசைத்தோம்
இன்று கை சேர துடிக்கிறோம்
அவள்
சிமிட்டும் அழகும்
சிரிக்கும் அழகும்
என் மனதில் ஆழமாய்
பதிந்து கிடக்கும்
பார்த்தாலே போதுமா
பேசுவோமே என்றால்
பார்த்தால் பலகோடி சுகம்
அதை பேச்சுக்கு பங்கு போட
இல்லையே மனம்
என்றாள்
எனது
ஆடை அலங்காரம் வைத்து
பிறந்த நாளை அறிந்ததும்
வீடு தேடி வந்தது
கோயில் பிரசாதம் —
ஜன்னல் வழியே தான்
பிரசாத காகிதத்தில் வாசகம்
‘ நீங்கள் பல்லாண்டு வாழனும்
உங்களுடனே நாணும் வாழனும் ‘
அந்த பிறந்த நாள்
எனக்கொரு பொன் நாள்
இன்றும் தொடர்கிறது
எங்கள் ஜன்னல் பேச்சு
என்று கூடுமோ
எங்கள் மூச்சு
[1997.04]