அடங்கட்டும் ஆண் வர்கம்

மரம் ஒடித்தாய் போகட்டும்
ஏன் மனம் ஒடிக்கின்றாய்

மணம் முடிப்பது என்ன
மனம் ஒடிக்கவோ

பெண் மனதின் புனிதம்
புரியுமா உமக்கு

மணம் முடிக்கும் முன்
ஒத்துப்போன மனம்
இப்போது என்ன
மறுக்கிறதோ

அழகை ரசித்தவன்
இப்போது ஏன் விமர்சிக்கிறாய்

உனக்கு மட்டும் தாசியாக
இருக்கலாம் உன் மனைவி
ஆனால் (உனக்கு) தாசியாக மட்டும் தான்
இருக்கனும் என்றால்…
உனக்கு தேவை ஒரு மனைவியல்ல !

தேகம் கிட்டியபின்
சந்தேகம் வந்ததின்
காரணம் தெரியுமா ?

‘மனம்’ என்பதை மறந்துவிட்டாய் நீ !

தேகம் தாண்டி
உள்ளுக்குள் தேடு
உள்ளம் உருவம் கொள்ளும்

அன்பிற்கு அடிமையாக
அவள் தயார்
உன் ஆனவத்திற்கும்
ஆண் வர்கத்திற்கும்
அடிமையென்றால்…
வேண்டாமே.

பெண்ணை தெரிந்துகொள்
அன்பை அடையாளம் கொள்
உள்ளதை உறமாக்கி
உயிரை பறிமாறு

முடியாது என்றால்
பெண்ணோடு வாழ
தகுதியில்லை உனக்கு
விளகிவிடு.

[]