அருள் அளித்து அனுப்பியவனுக்கு
அதற்குள் என்ன அவசரம்
ஆசை தீர வாழவிட
அவனுக்கு என்ன வெசனம்
அறுபது முடித்த கையோடு
அழைத்துக்கொண்டது சரியா
ஆண்டவனை கேள்வி கேட்க
யாருமே இல்லையா
உன் துடிப்பை நிருத்தி
எங்களை துடிக்க வைத்தான், இப்படி
தூக்கிப் போட துடிப்பென்ன
விளையாட்டுப் பந்தா
விடை சொல்ல நேரமில்லை
உறவினர் எவரும் பேசவில்லை
அவ்..வளவு அவசரம் என்ன
எனக்கு தான் புரியவில்லை
விட்டு சென்றதுக்கு அழவா?
விடுக்கென்று எடுத்து சென்றதுக்கு அழவா?
இரண்டுக்கும் அழுகின்றேன், நம்
இருவருக்கும் அழுகின்றேன்
என் கவிதையை படித்துக்காட்டுவது
உன்னிடம்
இதை நான் படித்துக்காட்டுவது
எவரிடம்?
என் எழுத்துப் பிழையை திருத்தினாய்
என் வாழ்க்கைப் பிழையை திருத்தினாய், அன்னையே
உன் விதியை திருத்த இயலாமல், இப்பொ
தேம்பி தேம்பி அழுகின்றேன்
(திரும்ப திரும்ப அழுகின்றேன்)
அம்மான்னு கூப்பிடும் முன்னே
ஆயுள் போயாச்சு
அம்மான்னு அழும்முன்னே
அஸ்தியும் கரசாச்சு
வாடா மலர் அம்மா
பிறர் மனம் வாடா வாழ்ந்த
வாடா மலர் அம்மா நீ
[2015.08.13]