சக்தியும் சிவனும்

காதலும் காமமும்
சக்தியும் சிவனும்
நீயும் நானும்

காதலும் காமமும் போட்டியிட்டால்
வெல்வது எது?

காமம் முன் சென்றால்
காதல் தோற்குமோ?
காதல் முன் சென்றால்
காமம் தோற்குமோ?
இரண்டும் சேர்ந்தால்
நமக்கு யோகமோ…

காதலும் காமமும் இனைபிரியாதவை
பிரித்த பாவம் நமக்கேன் தேவை

காதலையும் காமத்தையும் சேர்த்துவைத்தால்
காலத்தை வென்றுவிடலாம்.

::

வழிமேல் விழி – காதல்
வளைவில் விழி – காமம்

கையில் பூ – காதல்
பூவில் கை – காமம்

கண்கள் சந்திப்பில் பேசுவது காதல்
கட்டில் சத்தத்தில் மௌனம் காமம்

உள்ளம் சேர்பது காதல்
உடல் சேர்பது காமம்

உள்ளத்தின் நெருக்கம் காதல்
உடலில் இருக்கம் காமம்

ஆடை ஆபரணம் காதல்
அவையற்ற தருனமோ காமம்

அமைதி காதல்
வேகம் காமம்

அன்பு காதல்
ஆசை காமம்

[2005.Q4?]