மாற்றம்

மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகாதே !

மாற்றம்
உலக நியதி.

‘மாறாது, மாறாது’
என்ற, சொல் மட்டுமே மாறாது.
மற்றவை மாறிப் போகும்
மற்றவை மாறியே ஆகும்.

மாற்றங்கள் தோன்றும்.
மாற்றங்கள் தோன்றி
அது மறுபடி மாறி போகும்.

மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகாதே !

‘மாற்றம்’
என்பது மட்டும் மாறாது.
மற்றவை மாறிப் போகும்
மற்றவை மாறியே ஆகும்.
மாற்றம் என்பது
உலக நியதி !

நீர் மாறாமல் போனால்
மழை என்பது யாருக்கும் கிடையாது !
வயது மாறமல் போனால்
இன்று வாலிபம் என்பது நமக்கேது !
மனம் மாறாமல் போனால்
காதல் என்பது கிடையாது !
மனிதன் மாறாமல் போனால்
வாழ்க்கை என்பதே கிடையாது !

மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகதே!
மாற்றம் என்பது
உலக நியதி !

மாற்றங்கள் தோன்றும் போது
நீயும் மாறிப்போ
மாற்றத்திற்கு ஏற்ப
உன்னை மாற்றிக்கோ !

கசாயம் கசத்தாலும்
காய்ச்சலுக்கு குடித்துதான் ஆக வேண்டும் !
மாற்றங்களை
மனம் மறுத்தாலும்
அதை எற்றுத்தான் ஆக வேண்டும் !

மாற்றத்திற்கு மரணம், அது என்றும் இல்லை
மாற்றத்தில் மரிக்காமல், நாம் இருக்கவே
மாற்றத்தை புரிந்துக்கொள்
மனதைத் தேற்றிக்கொள்.
நிலைகுலையாமல் பார்த்துக்கொள்
அமைதி காக்க கற்றுக்கொள்.

உன்னை தவிர வேறொருவரும்
உனக்கு அமைதியை தர முடியாது.
உனக்கு அழத் தோன்றினால்
அழு…
நன்றாக அழு …
அழுதபின் அமைதிகாண
மௌனமாய் அமர்.

உள்ளத்தின் உள்ளுக்குள் சென்று
உண்மையை உணர்ந்து
உள்ளத்தை தெளிவாக்கு
வாழ்வை அமைதி வனமாக்கு
சந்தோஷத்தை என்றும்
உன் வசமாக்கு !

[1996]