தீ

உன்னை நேசி
உன்னை உணர்
உன்மை ஏற்கும்
மனதை வளர்

உனக்குள் வெப்பம்
மூட்டி விடு
உறங்கும் சக்தியை
எழுப்பி விடு

மூட்டிய தீயை
அனைய விடாதே
மூலை முடுக்கில்
முடங்கி விடாதே

விதித்தது இதுவென்று
ஒடிந்து விடாதே
விடியலை கானும் முன்
ஓய்ந்து விடாதே

எளிதில் கிடைத்தால்
வெற்றி இல்லை
எட்டிப் பிடித்தால்
தொலைவில் இல்லை

உயிரின் உணர்ச்சி
வளர்ச்சி யாகும்
வளர்ந்து உயிரை
உணர்த்த வேண்டும்

பத்தடி புதையல்
எட்டில் கிட்டாதே
பாதி கிணறு தாண்டி
நடுவில் விழாதே

வீழாமல் உயர்வது
அல்லவே வெற்றி
மீளாமல் உடைவது
அல்லவோ தோல்வி

பட்டினி என்றால்
அதைப் போக்கு
பின் வெற்றியின்
பக்கம் நீ நோக்கு

விழுந்து விழுந்து
நடை பழகிய நீ
இப்போது விழுந்தால்
ஏன் நடை பிணமாகிறாய்?

[]