புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
உன்னுள் ஊடுருவிய உறுத்தல் ஒன்றை
உனதாக்கி உறையாக்கி, ஆகாததை தகையாக்கி
அருமை அருமை உன் முயற்சி
புதிய மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா மண்ணை மேன்மை செய்
உனது ஆற்றலால் அழகை ஊற்று
எல்லா உயிர்க்கும் விந்தையாயிரு
எந்தன் இனத்துக்கும் அதை கற்றுக்கொடு
சிற்பியே சிற்பியே சிற்பியே என் சிப்பியே
சிற்பியே சிற்பியே சிற்பியே என் சிப்பியே
நாம் கற்க முடியவில்லை
நீ காட்டும் வித்தைகளை
நாம் கற்றது கையளவு
கல்லாதது உனதளவு
புயலும் புரட்சியும் தேவையில்லை
ஆயினும் சேதம் எதுவுமில்லை
உந்தன் வலிமை எங்குமில்லை
உன் பொறுமை எமக்கில்லை
உலகில் உள்ள எல்லா உயிர்க்கும்
உயர்ந்தவள் நீயே
உலகம் கண்ட முதல்
வாடகை தாயே
மரித்தாலும் உன்னுள் மரித்திடவே
நான் வரம் பெற்று வந்திடுவேன்
முத்தாய் எழிலாய் உயிர் பெயற்த்து
நான் மீண்டும் வாழ்த்திடுவேன்
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
சிற்பி சிப்பி பல விந்தை கண்டாலும்
உந்தன் வித்தை அதிசயமே
சிற்பி சிப்பி பல ஆண்டு கற்றாலும்
உன்னை மட்டும் புரியவில்லையே
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
[2017.05]