தூரத்தில் இருந்த தாய், தூரமாகவே போய்விட
தூரத்து தாயோ, தாயாகவே மாறிவிட
தடமெல்லாம், தாய் அன்பு அருளித்தான்
என் அப்பன் தாயுமானவன்.
[ 2018.08.07 ]
Tamil Poetry
தூரத்தில் இருந்த தாய், தூரமாகவே போய்விட
தூரத்து தாயோ, தாயாகவே மாறிவிட
தடமெல்லாம், தாய் அன்பு அருளித்தான்
என் அப்பன் தாயுமானவன்.
[ 2018.08.07 ]
நம் வழி வந்தாலும், நமது இல்லையே,
வந்து செல்லும் வழிப்போக்கன் நமது செல்வமே,
அணை போட்டு கட்டி வைக்க, ஆறும் இல்லையே – அவர்
ஆற்றலை பூட்டி வைக்க யாரும் இல்லையே
கைபிடித்து நடத்தி செல்வது நமது சேவையே
நடந்த பின் கடந்து செல்வது அவரின் தேவையே
[2017.07]
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
உன்னுள் ஊடுருவிய உறுத்தல் ஒன்றை
உனதாக்கி உறையாக்கி, ஆகாததை தகையாக்கி
அருமை அருமை உன் முயற்சி
புதிய மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா மண்ணை மேன்மை செய்
உனது ஆற்றலால் அழகை ஊற்று
எல்லா உயிர்க்கும் விந்தையாயிரு
எந்தன் இனத்துக்கும் அதை கற்றுக்கொடு
சிற்பியே சிற்பியே சிற்பியே என் சிப்பியே
சிற்பியே சிற்பியே சிற்பியே என் சிப்பியே
நாம் கற்க முடியவில்லை
நீ காட்டும் வித்தைகளை
நாம் கற்றது கையளவு
கல்லாதது உனதளவு
புயலும் புரட்சியும் தேவையில்லை
ஆயினும் சேதம் எதுவுமில்லை
உந்தன் வலிமை எங்குமில்லை
உன் பொறுமை எமக்கில்லை
உலகில் உள்ள எல்லா உயிர்க்கும்
உயர்ந்தவள் நீயே
உலகம் கண்ட முதல்
வாடகை தாயே
மரித்தாலும் உன்னுள் மரித்திடவே
நான் வரம் பெற்று வந்திடுவேன்
முத்தாய் எழிலாய் உயிர் பெயற்த்து
நான் மீண்டும் வாழ்த்திடுவேன்
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
சிற்பி சிப்பி பல விந்தை கண்டாலும்
உந்தன் வித்தை அதிசயமே
சிற்பி சிப்பி பல ஆண்டு கற்றாலும்
உன்னை மட்டும் புரியவில்லையே
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
புதிய மகளே பூமிக்கு வா
புனித மகளே பூமிக்கு வா
[2017.05]
மணியோ பதினொன்று
மனைவி நான் இங்கு
மனவாளன் எங்கென்று
மயங்கி கிடக்க
மடியில் அவளோடு
மயக்கத்தில் மணியோட
மங்கை என்னை
மறந்தானேன் ?
கை சேர்த்து போவதென்ன
தோல் சுமந்து வருவவென்ன
சட்டென்று கை சரிந்தால்
வெடுக்கென்று பிடிப்பதென்ன
பாசாங்கு இன்றி
பக்குவமாய் வந்து
படுக்கை வரை
வந்து விட்டாளே
எனக்கும் பிடித்தவள் தான்
என் இடத்தை பிடிப்பதா
தண்டிக்கவா, துண்டிக்கவா
துறக்கவா, துரத்தவா
இல்லை..
தூக்கி எறியவா
விரல் காட்டும் வித்தையை
வீசுடு எனக்கும்
விளையாட நான் தயார்
விடியும் வரைக்கும்.
[2016.01.22]
ஆடை ஆபரண
ஆசையிணும் மேலாய்
ஆவேச தீயாய்
அவளது மோகம்
அனையா கதிரும்
அடங்கா கடலும்
அவளின் கனலுக்கு
அடிமை காணும்
அலையை கரை தடுக்கலாம்
நதியை அணை தடுக்கலாம்
ஆசை கொண்ட பெண் மனதை
தடுப்பதாகாது
மோகப் பெண்ணுக்கு
காமனும் காலடி
பெண்ணின் காதலுக்கு
காமமே முதற்படி
[2016.01.25]
உலகம் சுற்றும் வாலிபனை போற்றும்
ஊர் சுற்றும் வாலிபனை தூட்றும்
[2016.02.02]
அருள் அளித்து அனுப்பியவனுக்கு
அதற்குள் என்ன அவசரம்
ஆசை தீர வாழவிட
அவனுக்கு என்ன வெசனம்
அறுபது முடித்த கையோடு
அழைத்துக்கொண்டது சரியா
ஆண்டவனை கேள்வி கேட்க
யாருமே இல்லையா
உன் துடிப்பை நிருத்தி
எங்களை துடிக்க வைத்தான், இப்படி
தூக்கிப் போட துடிப்பென்ன
விளையாட்டுப் பந்தா
விடை சொல்ல நேரமில்லை
உறவினர் எவரும் பேசவில்லை
அவ்..வளவு அவசரம் என்ன
எனக்கு தான் புரியவில்லை
விட்டு சென்றதுக்கு அழவா?
விடுக்கென்று எடுத்து சென்றதுக்கு அழவா?
இரண்டுக்கும் அழுகின்றேன், நம்
இருவருக்கும் அழுகின்றேன்
என் கவிதையை படித்துக்காட்டுவது
உன்னிடம்
இதை நான் படித்துக்காட்டுவது
எவரிடம்?
என் எழுத்துப் பிழையை திருத்தினாய்
என் வாழ்க்கைப் பிழையை திருத்தினாய், அன்னையே
உன் விதியை திருத்த இயலாமல், இப்பொ
தேம்பி தேம்பி அழுகின்றேன்
(திரும்ப திரும்ப அழுகின்றேன்)
அம்மான்னு கூப்பிடும் முன்னே
ஆயுள் போயாச்சு
அம்மான்னு அழும்முன்னே
அஸ்தியும் கரசாச்சு
வாடா மலர் அம்மா
பிறர் மனம் வாடா வாழ்ந்த
வாடா மலர் அம்மா நீ
[2015.08.13]
உன்னை நேசி
உன்னை உணர்
உன்மை ஏற்கும்
மனதை வளர்
உனக்குள் வெப்பம்
மூட்டி விடு
உறங்கும் சக்தியை
எழுப்பி விடு
மூட்டிய தீயை
அனைய விடாதே
மூலை முடுக்கில்
முடங்கி விடாதே
விதித்தது இதுவென்று
ஒடிந்து விடாதே
விடியலை கானும் முன்
ஓய்ந்து விடாதே
எளிதில் கிடைத்தால்
வெற்றி இல்லை
எட்டிப் பிடித்தால்
தொலைவில் இல்லை
உயிரின் உணர்ச்சி
வளர்ச்சி யாகும்
வளர்ந்து உயிரை
உணர்த்த வேண்டும்
பத்தடி புதையல்
எட்டில் கிட்டாதே
பாதி கிணறு தாண்டி
நடுவில் விழாதே
வீழாமல் உயர்வது
அல்லவே வெற்றி
மீளாமல் உடைவது
அல்லவோ தோல்வி
பட்டினி என்றால்
அதைப் போக்கு
பின் வெற்றியின்
பக்கம் நீ நோக்கு
விழுந்து விழுந்து
நடை பழகிய நீ
இப்போது விழுந்தால்
ஏன் நடை பிணமாகிறாய்?
[]
Inspired by / Roughly in the tune of நாலு கழுத வயசானா song from 36 வயதினிலே movie.
காலையில எழுந்த உடன்
Phone-ல் என்ன கிடக்கு
காலை கடன் முடித்த பின்ன
வேலைய நீ துடங்கு
Facebook-அ மூடி வச்சு
Face-to-face நீ பழகு
அக்கம் பக்கம் சொந்தத்தோடு
ஒட்டி உறவு பழகு
Like-அ தேடி போரத
என்னானு சொல்ல
Life-அ Like-கு பண்ணாக்க
வேறேது தொல்ல
கவலையே தான் daily daily
தொத்திக் கொண்டு இருக்கு
தொத்து வியாதிபோல அது
பரவியே தான் கிடக்கு
கவலை போக்க கண்ட இடம்
தேடி போகும் முன்ன
நீ தேடி பாரு உள்ள
தேடி பாரு உள்ள
தேடி பாரு உள்ள
[2015.07]
ஏன் பிறந்தேன் என்றால்…
அனுப்பி வைத்தான்
அவதரித்தேன்.
ஏன் பிறந்தேன் என்றால்…
அது ஒன்றே நான் அறிவேன்.
நான் செய்ததென்றால்
காரணம் அறிவேன் — இது
நான் செய்த தன்று
செயலில் நான் ஒரு பங்கு
எதற்கு அனுப்பிவைத்தான், தெரியவில்லை
தெரியாமல் என் செய்ய புரியவில்லை
அனுப்பியவன் எங்கே காணவில்லை
கண்ணாம்மூச்சி விளையாட இது நேரம் இல்லை
கண் மூடி திறப்பதற்குள்
முப்பது ஆண்டுகள் முடிந்தது
திறந்த கண் மூடுவதற்குள் — இன்னும்
எத்தனை ஆண்டுகள் இருக்கிறதோ —
அதற்குள் எத்தனை ஆட்டங்கள் வருகிறதோ.
செய்வதறியாமல் செய்வதென்ன
களத்தில் இரங்காமல் ஜெயிப்பதென்ன
செய்ய ஏதும் இல்லை என்று
எது வேண்டுமானாலும் செய்யலாமா?
செய்ய என்ன இருக்கு என்று
தேடிப் பார்த்து செய்யனுமா?
நாளுக்கு நாள் செல்கிறது
நான் செய்ததென்ன தெரியவில்லை
நாள் தொரும் இப்படியே போனால்
நான் காணும் பயன் என்ன புரியவில்லை.
வாழ்வளித்து அனுப்பியது
எனக்காகவா? பிறருக்காகவா?
என்னால் எனக்கென்ன பயன்
என்னால் பிறருக்கென்ன பயன்
பயன் இருந்தே ஆகனுமா வாழ்வில்
பயன் இல்லையேல்
பாழாய் போய்விடுமா சில நாளில்
எட்டா இழக்கை எட்ட துடிப்பது வாழ்வா
எட்டிய இழக்கை எண்ணி மகிழ்வது வாழ்வா
ஓடிக்கொண்டே இருப்பது தான் வாழ்வா
ஓடையின் மடியில் ஓய்வெடுப்பது வாழ்வா
நாம் காணும் கனவே வாழ்க்கையா
நாம் வாழும் வாழ்க்கையே கனவா
ஆயிரம் கேள்விகளுக்கும்
ஓரே விடை.
ஒரு விடை சொல்வதற்கும்
ஆள் யாரும் இல்லை.
விடை தேடுவதே வாழ்க்கையா
வினா தொடுப்பதே வாழ்க்கையா
(விடை) அறியவே ஆயுட் காலம் எடுத்தால்
அறிந்ததை அமல் படுத்துவது எப்போது
அமல் படுத்த ஏதும் இல்லையா
அதற்கென உள்ளதே அடுத்த பிறவியா
மீண்டும் பிறந்தால்
அறிந்ததை அறிவோமா? — இல்லை
வாழ்க்கை பயணம் தொடருமா?
(அறிய மீண்டும் அலைவோமா?)
[2003.07.01]
காதலும் காமமும்
சக்தியும் சிவனும்
நீயும் நானும்
காதலும் காமமும் போட்டியிட்டால்
வெல்வது எது?
காமம் முன் சென்றால்
காதல் தோற்குமோ?
காதல் முன் சென்றால்
காமம் தோற்குமோ?
இரண்டும் சேர்ந்தால்
நமக்கு யோகமோ…
காதலும் காமமும் இனைபிரியாதவை
பிரித்த பாவம் நமக்கேன் தேவை
காதலையும் காமத்தையும் சேர்த்துவைத்தால்
காலத்தை வென்றுவிடலாம்.
::
வழிமேல் விழி – காதல்
வளைவில் விழி – காமம்
கையில் பூ – காதல்
பூவில் கை – காமம்
கண்கள் சந்திப்பில் பேசுவது காதல்
கட்டில் சத்தத்தில் மௌனம் காமம்
உள்ளம் சேர்பது காதல்
உடல் சேர்பது காமம்
உள்ளத்தின் நெருக்கம் காதல்
உடலில் இருக்கம் காமம்
ஆடை ஆபரணம் காதல்
அவையற்ற தருனமோ காமம்
அமைதி காதல்
வேகம் காமம்
அன்பு காதல்
ஆசை காமம்
[2005.Q4?]
பத்து பொருத்தம் பார்த்தும்
பாதியில் கழுன்டாச்சு
உள்ளம் பொருந்தாவிட்டால்
ஜாதகம் உதவாது.
சாதி சனம் பார்த்தாச்சு
சாதகம் (ஜாதகம்) சேர்த்தாச்சு
பெண் பார்க்கும் போதே
சம்மதம் சொல்லியாச்சு
தேதி குறிக்கும் வேலையில்
சேதி ஒன்னு வந்தது
கனித மேதையின்
கனக்கு வழக்கீடு
தாய் சொல்லை தட்டாத தனயன்
தயங்காமல், தந்து விடு என்றான்
பெற்ற செலவு
வளர்த்த செலவு
படித்த செலவு
படுத்த செலவு
வந்த செலவு
போன செலவு
பட்டியல் இட்டு
மொத்த தொகை சொல்லியாச்சு
தவனையில் தந்தால் போதுமாம்
தாலி கட்டும் முன் !
வாகன வசதி
வாய் திறந்தால் ஆங்கிலம்
கணிப்பொறி வேலை
கை நிரைய சம்பலம்
ஆடை ஆபரணம்
அமேரிக்க ஆடம்பரம்
ஆசை யாரைவிட்டது
அங்கே தான் ஆரம்பம்.
[2006.02?]
அழகைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்
அன்பைப் பார்த்தால்
அடியே உன்தன் ஞாபகம்
என் முகத்தைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
அடியேன் அழகாய் தெரிந்தால்
அடியே உன்தன் ஞாபகம்
மலரைக் கண்டால்
அடியே உன்தன் ஞாபகம்
மழலை கேட்டால்
அடியே உன்தன் ஞாபகம்
நகம் கடித்தால்
அடியே உன்தன் ஞாபகம்
நரை வந்தாலும்
இருக்குமே உன் தன் ஞாபகம்
[]
:1:
பெண்ணை மணம் முடிக்க
பணம் பார்க்கவில்லை என்றால் முதல் முடிச்சு
இணம் பார்க்கவில்லை என்றால் இரண்டாம் முடிச்சு
பின், இரு மனம் சேர வருவதுதான் மூன்றாவது முடிச்சு.
பணம் கேட்டால் முதல் முடிச்சு கிடையாது
இணம் பார்த்தால் இரண்டாவதும் போயாச்சு
பின், ஒற்றை முடிச்சு போட்டுப் பார்த்தால்
மாங்கல்யமும் அவிழ்ந்து விழும்
மங்கையின் வாழ்வும் அறுந்து விடும்.
:2:
மூன்று முடிச்சு போட
மூன்று ground கேட்டாக
பத்து முடிச்சு போடுவதென்றால்
பத்து ground கேட்பாரோ
ஒற்றை முடிச்சு போதுமே,
தந்தையாரிடம் தாரைவார்க்க பூமி இல்லை.
[1990-1992?]
உன்னை காண மனம் துடித்தது
கண்டதும் தெம்பு வந்தது
கணவிலே நீ வந்தது
இதெல்லாம் காதல் என்பது
புரியவில்லை அப்போது
கண்ணிலே ஒளி பிறந்தது
நெஞ்சிலே கனம் குரைந்தது
அன்றே உன்மேல் காதல் இருந்தது
இன்று தான் எனக்கு உணர்ந்தது
உன்னை எண்ணியே காலம் சென்றது
நீ இருக்கையில் காலம் பறந்தது
எந் நாளும் உன்னை எண்ணியே
இன்றும் மனம் மகிழ்ந்தது
உன்னால் கவிதை வந்தது
உன்னால் வலி பறந்தது
உன் மேல் காதல் வந்ததை
அறியாமல் போனதென்ன
நினைவெல்லாம் நீயே இருந்ததால்
காதலை கண்டறிய முடியவில்லை
நீயும் தகவல் சொல்லவில்லை
தடயம் மட்டும் விட்டுச் சென்றாய்
வழக்கம் போல் இந்த மடையனுக்கு
மண்டையில் ஏற வில்லை
இன்று, நீயே விரும்பினாலும்
வர முடியாத நிலையில் நீயும்…
உன்னை எண்ணியே
வருந்தும் நிலையில் நானும்…
கையில் இருந்ததை கோட்டைவிட்டு
இன்று கவிதை பாடித் தேற்றி கொள்கிறேன்
கல்யாணதிற்கு பெண் தேடுகிறார்கள்
எப்படி பெண் வேண்டும் விவரித்தேன்
பின்பு தான் தெரிந்தது அவை அனைத்தும்
உன்னில் இருப்பதென்று
கையில் இருந்த உன்னை துளைத்து விட்டு
உன்னை போல் ஒருத்தியை தேடுகிறேன்
உம்…எனக்கே சிரிப்பு வருது
இன்று என்மேல் வெறுப்பு வந்தது
காதல் மேலும் வளர்ந்தது
உன்னை எண்ணிப் பார்க்கையில்
இன்றும் கவிதை வந்தது
நாம் சேரும் நெனப்பு வருது
தினமும் ஆசை வளருது
இதெல்லம் சரியா தப்பா
நெஞ்சிலே கேள்வி எழுது (எழுந்தது)
பதில் சொல்ல யாரும் இல்லை
இருந்திருந்தால் இந்நிலை இங்கு இல்லை
வாழ்க்கையே கேள்விக்குறியா
இல்லை நான் அப்படி ஆக்கிக் கொண்டேனா ?!
[]
உன்னை காண மனம் துடித்தது
கண்டதும் தெம்பு வந்தது
கணவிலே நீ வந்தது
இதெல்லாம் காதல் என்பது
புரியவில்லை அப்போது
கண்ணிலே ஒளி பிறந்தது
நெஞ்சிலே கனம் குரைந்தது
அன்றே உன்மேல் காதல் இருந்தது
இன்று தான் எனக்கு உணர்ந்தது
உன்னை எண்ணியே காலம் சென்றது
நீ இருக்கையில் காலம் பறந்தது
எந் நாளும் உன்னை எண்ணியே
இன்றும் மனம் மகிழ்ந்தது
உன்னால் கவிதை வந்தது
உன்னால் வலி பறந்தது
உன் மேல் காதல் வந்ததை
அறியாமல் போனதென்ன
இன்று என்மேல் வெறுப்பு வந்தது
காதல் மேலும் வளர்ந்தது
உன்னை எண்ணிப் பார்க்கையில்
இன்றும் கவிதை வந்தது
[]
மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகாதே !
மாற்றம்
உலக நியதி.
‘மாறாது, மாறாது’
என்ற, சொல் மட்டுமே மாறாது.
மற்றவை மாறிப் போகும்
மற்றவை மாறியே ஆகும்.
மாற்றங்கள் தோன்றும்.
மாற்றங்கள் தோன்றி
அது மறுபடி மாறி போகும்.
மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகாதே !
‘மாற்றம்’
என்பது மட்டும் மாறாது.
மற்றவை மாறிப் போகும்
மற்றவை மாறியே ஆகும்.
மாற்றம் என்பது
உலக நியதி !
நீர் மாறாமல் போனால்
மழை என்பது யாருக்கும் கிடையாது !
வயது மாறமல் போனால்
இன்று வாலிபம் என்பது நமக்கேது !
மனம் மாறாமல் போனால்
காதல் என்பது கிடையாது !
மனிதன் மாறாமல் போனால்
வாழ்க்கை என்பதே கிடையாது !
மாற்றத்தைக் கண்டு
மனம் விட்டுப் போகதே!
மாற்றம் என்பது
உலக நியதி !
மாற்றங்கள் தோன்றும் போது
நீயும் மாறிப்போ
மாற்றத்திற்கு ஏற்ப
உன்னை மாற்றிக்கோ !
கசாயம் கசத்தாலும்
காய்ச்சலுக்கு குடித்துதான் ஆக வேண்டும் !
மாற்றங்களை
மனம் மறுத்தாலும்
அதை எற்றுத்தான் ஆக வேண்டும் !
மாற்றத்திற்கு மரணம், அது என்றும் இல்லை
மாற்றத்தில் மரிக்காமல், நாம் இருக்கவே
மாற்றத்தை புரிந்துக்கொள்
மனதைத் தேற்றிக்கொள்.
நிலைகுலையாமல் பார்த்துக்கொள்
அமைதி காக்க கற்றுக்கொள்.
உன்னை தவிர வேறொருவரும்
உனக்கு அமைதியை தர முடியாது.
உனக்கு அழத் தோன்றினால்
அழு…
நன்றாக அழு …
அழுதபின் அமைதிகாண
மௌனமாய் அமர்.
உள்ளத்தின் உள்ளுக்குள் சென்று
உண்மையை உணர்ந்து
உள்ளத்தை தெளிவாக்கு
வாழ்வை அமைதி வனமாக்கு
சந்தோஷத்தை என்றும்
உன் வசமாக்கு !
[1996]
கல்யாணம் முடிந்து விட்டால்
கவலை தீர்ந்து விடுமாம்
கடவுளே சொன்னது போல்
கண்மூடி தனம் ஏனோ?
நம்பிக்கை – ஞாயம் தான்
மூட நம்பிக்கை பாவம் தான்
கல்லுளி மங்கனும்
கருனையில்லா கயவனும்
கணவனாய் ஏற்க
கன்னிக்கென்ன தலைவிதியா?
மூனு வயசு சின்னவ எல்லாம்
மூனு புள்ள பெத்தாச்சு
முப்பது ஆகும் முன்னே
முடிச்சு ஒன்னு போடவேனும்
::
வயதாகும் தந்தை
கண் கசக்கும் அன்னை
கண்ணீரைப் போக்கவே
கல்யாண ஏற்பாடாம்
கடன் வாங்கி, கண் கசக்கி
கல்யாணம் முடித்து விட்டு
அப்பாடா-ன்னு அமரும் முன்னே
அப்பா-ன்னு குரல் கேட்கும்
கொடுத்தது பத்தல
கொண்டுவா மீதி-ன்னு
வீதியிலே விட்டேறிந்தான்
கட்டையில போர பய
கண்ணீரும் பையுமா
பொரந்த வீடு வந்தாச்சு
கண்ணியின் கல்யாணம்
அதற்குள் முடிந்தாச்சு
கண்மூடும் காலதுல
கடன் வாங்கி கல்யாணம்
மீண்டும் காசுன்னா
கடவுளே நான் என்செய்ய
கண்ணீரும் கவலையும் வாடிக்கையாச்சு
கண்ணியின் கனவோ மறந்தே போயாச்சு.
[2005.Q1?]
கம்ப்யுட்டர் (Computer) காலத்தில்
காதலிக்க காலமில்லை
காதல் வந்தாலும்
கவனிக்க காலமில்லை
காதலா கானல் நிரா
கண்டறிய காலமில்லை
காதலே ஆனாலும்
கண் அடிக்க காலமில்லை
காத்திருந்து,
காதலியை கண்டு
கையோடு கை சேர்ந்து
கண்ணோடு கண் பார்த்து
கவிதை பாடும் காலம்
காணாமல் போனதே.
கடவுளே
காதலியை காணவே
காலங்கள் ஆகுதே
காலமெல்லாம் வைத்து அவளை
கண்டுக்கொள்ள முடியுமா ?!
காதலுக்கு
காலம் வேண்டும்.
கண்ணோடு கனவுகான
காலம் வேண்டும்.
பெண்ணோடு கவிதைப்பாட
காலம் வேண்டும்.
நிலவை நின்று ரசிக்க
காலம் வேண்டும்.
நினைவை நெருடிப் பார்க்க
காலம் வேண்டும்.
மடிமேல் சாய்ந்து
மனம் விட்டுப் பேச
காலம் வேண்டும்.
காதலுக்கு
காலம் வேண்டும்.
ஏதும் முடியாத பட்சத்தில்
மார்போடு மடிவதற்காவது
சற்று காலம் வேண்டும்.
[]
பட்டப் பகலில் மொட்டவிழ்ந்தது
நீ அங்கு வந்ததால்
பட் பட் என்று மலர்கிறது
உன் பார்வை பட்டதால்
காலங்காலையில்
கதிரவன் அவசரமாய்
கார்மேகத்தில் புதைந்தான்
நீ வியர்வை சிந்தியதை
பார்த்துவிட்டது போலும்
உன்னை காண இயலாத
கவலையில் கண் ணீர் வடித்தான்
உன்னை நினைத்தே
உன்னையும் நனைத்தான்
நீ ஆடை உலர்த்த
தன்னை தேடி வரும் தருணத்தில்
ஆனத்தமாய் சிரித்தான்
உன் கூந்தல் எறவே
பூக்கள் மலர்கின்றன
உன் பாதம் படவே
உதிர்ந்தவையும் தவிக்கின்றன
தொட்டாசிணுங்கியும்,
நீ தொட்டால் சிணுங்குவதில்லை
சிலிர்த்துத்தான் போகிறது
நீ நாணும் போது சிவப்பது
உன் முகம் மட்டும் அல்ல
இந்த வானும், நானும் தான்
குயில், நீ வந்தால் தான் பாடுகிறது
மயிலும் உன் முகம் கண்டால் தான் ஆடுகிறது
அன்னம் நடைப்பழக
அன்பே உன்னை அழைக்கிறதாம்
உன்னை காண வேண்டியே
நிலவு தேய்ந்து போனது
நீ தான் இரவில் வெளிவருவதில்லையே
எப்போதாவது வரும்போது
அதன் பிறவிப் பயன் பூர்த்தியடைகிறது
நீ தொட்டால் முல்லும் மலரும்
உன் கைப்பட்டால் கல்லும் கரையும்
உன்னை தேடி வந்து
தென்றல் வீசும்
உன் பாதம் நனைக்காமல் ஓய்வதில்லை
என்று அலைகள் பேசும்
இயற்கையின் அதிசயமே
இயற்கையே உனக்கு அடிமை
இந்த இளைஞன் எம்மாத்திரம்
உன்னை காணும்போதே
என் இதயம் துடிக்கிறது
நீ இமைக்கும் போது
அது இரட்டிப்பு ஆகிறது
நீ பருகும் தண் ணீரும்
தேனாய் இனிக்கிறது
நீ இல்லாமல் பண் ணீ ரும்
ஏனோ வெறுக்கிறது
மண் பார்த்தே நடக்கின்றாயே
நான் மண்ணாக பிறந்திருக்கலாம்
புல்லில் உறங்குகின்றாயே
நான் புல்லாக பிறந்திருக்கலாம்
மனிதனாக் பிறந்ததே
உன்னை மணந்துக் கொள்ளத்தான்
என்னுள் இருக்கும் உன்னிடம்
நான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றேன்
எப்போது நீ என்னிடம்
எப்போதும் பேசப் போகின்றாய்
முதல் சந்திப்பின் நிலையிலேயே
இன்றும் இருக்கின்றோம்
நம் உறவில் ஏன் இன்னும் நெறுக்கம் இல்லை
இதனால் எனக்கு என்றும் உறக்கம் இல்லை
அடுத்து நான் உறங்குவது
உன் மடியில்; இல்லையேல்
மண்ணுக்கடியில்
[1996.09.08]
இளைஞனே நீ எழுந்து வா
உறுதியுடனே விரைந்து வா
வெற்றி தேடி ஓடி வா
கடமை உணர்வு கொண்டு வா
காத்திருக்க நேரமில்லை
காலம் என்றும் நிற்பதில்லை
காலம் அறிந்து செயல்பட்டால்
வெற்றி இதோ தொலைவில் இல்லை.
வெற்றி காண தடை எது
தெரிந்து அதை தகர்த்தெடு
நம்பிக்கை யோடு அடி எடு
வெற்றி நோக்கி படை எடு
முடியும் என்றால் முடியாததில்லை
முடியாது என்றால் முடியப்போவதில்லை
முடியும் என்றே முடிவெடு
முடித்துக் காட்ட புறப்படு.
[1995?]
மூடியே கிடந்த
ஜன்னல் கதவுகளை திறந்தேன் …
என் வாழ்வில்
வசந்தம் வீசியது.
என்
ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜன்னல், அந்த
ஜன்னலுக்கு உள்ளே, ஒரு ஜ்வால மின்னல்
மின்னல் தாக்கின் தாங்குமா
இதயம் பலவீணமானது
இடியில்லா மின்னல்
இதயம் இடம் மாற
செய்த மின்னல்
கம்பிக்கு பின்
ஒரு காவியம்
தொடங்கியது
காதல் ஓவியம்
உலகம் தடையாய்
தெரியவில்லை
கம்பி தடையாய்
இருந்தது
ஆறு மணிக்கு
பார்த்த நாள் முதல்
அந்நேரம் ஆனால்
ஜன்னல் வாசம்
முதலில் பார்க்கத்
தான் செய்தோம்
பிறகு சிரித்தோம்
பின் கை அசைத்தோம்
இன்று கை சேர துடிக்கிறோம்
அவள்
சிமிட்டும் அழகும்
சிரிக்கும் அழகும்
என் மனதில் ஆழமாய்
பதிந்து கிடக்கும்
பார்த்தாலே போதுமா
பேசுவோமே என்றால்
பார்த்தால் பலகோடி சுகம்
அதை பேச்சுக்கு பங்கு போட
இல்லையே மனம்
என்றாள்
எனது
ஆடை அலங்காரம் வைத்து
பிறந்த நாளை அறிந்ததும்
வீடு தேடி வந்தது
கோயில் பிரசாதம் —
ஜன்னல் வழியே தான்
பிரசாத காகிதத்தில் வாசகம்
‘ நீங்கள் பல்லாண்டு வாழனும்
உங்களுடனே நாணும் வாழனும் ‘
அந்த பிறந்த நாள்
எனக்கொரு பொன் நாள்
இன்றும் தொடர்கிறது
எங்கள் ஜன்னல் பேச்சு
என்று கூடுமோ
எங்கள் மூச்சு
[1997.04]
மரம் ஒடித்தாய் போகட்டும்
ஏன் மனம் ஒடிக்கின்றாய்
மணம் முடிப்பது என்ன
மனம் ஒடிக்கவோ
பெண் மனதின் புனிதம்
புரியுமா உமக்கு
மணம் முடிக்கும் முன்
ஒத்துப்போன மனம்
இப்போது என்ன
மறுக்கிறதோ
அழகை ரசித்தவன்
இப்போது ஏன் விமர்சிக்கிறாய்
உனக்கு மட்டும் தாசியாக
இருக்கலாம் உன் மனைவி
ஆனால் (உனக்கு) தாசியாக மட்டும் தான்
இருக்கனும் என்றால்…
உனக்கு தேவை ஒரு மனைவியல்ல !
தேகம் கிட்டியபின்
சந்தேகம் வந்ததின்
காரணம் தெரியுமா ?
‘மனம்’ என்பதை மறந்துவிட்டாய் நீ !
தேகம் தாண்டி
உள்ளுக்குள் தேடு
உள்ளம் உருவம் கொள்ளும்
அன்பிற்கு அடிமையாக
அவள் தயார்
உன் ஆனவத்திற்கும்
ஆண் வர்கத்திற்கும்
அடிமையென்றால்…
வேண்டாமே.
பெண்ணை தெரிந்துகொள்
அன்பை அடையாளம் கொள்
உள்ளதை உறமாக்கி
உயிரை பறிமாறு
முடியாது என்றால்
பெண்ணோடு வாழ
தகுதியில்லை உனக்கு
விளகிவிடு.
[]
ஆடி முடித்தவர் எவருண்டு
அடங்கி கிடப்பவர் பலருண்டு
அடங்கும் காலம் வருமுன்று
அடக்கி வாழ்ந்தால் வளமுண்டு
[2005.Q1]
வைத்ததை விட
வாங்கிய பெயரே முக்கியம்.
வீழாமல் இருப்பது அல்ல,
மீளாமல் இருப்பதுவே தோல்வி.
[]
வேண்டா வெறுப்பா வேலை செய்தால்
வெற்றி வராது
வியர்வை சிந்தி வேலை செய்தால்
தோல்வி நீளாது!
[2012.05.19]